Essonne : 90 மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்த சாகச வீரர்.. அதிஷ்ட்டவசமாக உயிர்தப்பினார்..!

8 ஐப்பசி 2024 செவ்வாய் 09:31 | பார்வைகள் : 8930
Base jump எனப்படும் வானத்தில் இருந்து குதிக்கும் சாகச விளையாட்டில் ஈடுபடும் வீரர் ஒருவர், அதிஷ்ட்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
Essonne மாவட்டத்தில் உள்ள 90 மீற்றர் உயரமான Puiselet-le-Marais கட்டிடத்தின் கூரையில் இருந்து குதித்துள்ளார். பராசூட் அணிந்திருந்தபோதும் அதனை இயக்குவதற்குரிய நேர அவகாசம் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கிருந்து மரம் ஒன்றில் மோதுண்டு காயமடைந்து கீழே வந்து விழுந்துள்ளார்.
37 வயதுடைய குறித்த வீரர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 5, சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.