Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகப்பெரிய சந்தை! - ஒரு ஆச்சரிய தொடர்..!! (பகுதி 1)

உலகின் மிகப்பெரிய சந்தை! - ஒரு ஆச்சரிய தொடர்..!! (பகுதி 1)

3 சித்திரை 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18886


உலகில் மிகப்பெரிய சந்தை பிரான்சில் இருப்பது உங்களுக்கு தெரியுமா..?? இது தொடர்பாக பல ஆச்சரியத்தகவல்களை இந்த 'சிறிய' தொடர் மூலம் அறிந்துகொள்ளலாம்...
 
Val-de-Marne மாவட்டத்தில் உள்ள Rungis நகரில் உள்ளது இந்த சந்தை.  Marché International de Rungis எனும் இந்த ஒரு 'மொத்த வியாபார' நிலையமாகும். 
 
பிரதானமாக உணவு பண்டங்களே இங்கு விற்பனையாகின்றன. 
 
ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து இங்கு உணவு பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. பின்னர் இங்கிருந்து பிரான்ஸ் முழுவதும் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. 
 
இந்த சந்தை எப்போது ஆரம்பித்தது என மிக துல்லியமான தகவல் இல்லை. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த சந்தை இயங்கி வருவதாக தகவல்கள் உண்டு. 
 
பரிசின் மத்தியில் Les Halles இல் இந்த சந்தை முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பத்து ஹெக்டேயர்கள் எனும் விசாலமான சந்தையாக இது இருந்தது. ஒட்டுமொத்த வியாபாரிகளும் இங்கு தான் குவிந்தனர். 
 
ஆனால் காலப்போக்கில் இந்த சந்தைக்கு இடப்பற்றாக்குறை வந்தது.  இதை விடவும் மிகப்பெரிய ஒரு நிரப்பரப்பு தேவைப்பட்டது. 
 
அப்போது தான் சந்தை பரிசை விட்டு வெளியே கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
 
- நாளை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்