Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில்  ரேபிஸ் வைரஸ் - நிபுணர்கள் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில்  ரேபிஸ் வைரஸ் - நிபுணர்கள் எச்சரிக்கை

8 ஐப்பசி 2024 செவ்வாய் 10:20 | பார்வைகள் : 6493


கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வௌவால் ஒன்றிடமிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட ரேபிஸ் வைரஸ் தற்போது வௌவால் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Glarus மாகாணத்திலுள்ள Mühlehorn என்னுமிடத்தில், வௌவால் ஒன்றில் ரேபிஸ் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் 7 முறை மட்டுமே ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில், முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட ரேபிஸ் வைரஸ் தற்போது வௌவால் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசாதாரணமாக நடந்துகொள்ளும் வன விலங்குகள் எதையும் மக்கள் அணுக வேண்டாம் என்றும், யாரையாவது வௌவால் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்