பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள்..!! (பகுதி 3)
17 பங்குனி 2020 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 19466
1979 ஆம் ஆண்டு வரை பிரான்சில் பத்து, இருபது என இடம்பெற்று வந்த பயங்கரவாத சம்பவங்கள், 79 ஆம் ஆண்டில் பிரான்சை ஒரு ஆட்டு ஆட்டியது...
அதுவரை இல்லாத அளவு அவ்வருடத்தில் 212 சம்பவங்கள் இடம்பெற்றன. பலர் கைது செய்யப்பட்டதோடு, நாட்டின் பல பாகங்களில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அவ்வருடத்தில் 11 பேர் பலியாகியிருந்ததோடு, 41 பேர் காயமடைந்தும் இருந்தனர்.
இப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தடுப்பு பிரிவினர் உருவாக்கப்பட்டனர்.
1980 ஆம் ஆண்டு 94 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றன. அவ்வருடத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். 74 பேர் காயமடைந்தனர். பிரான்ஸ் தற்போது மேலும் நெருக்கடிக்குள்ளானது.
ஒக்டோபர் 3 ஆம் திகதி பரிசில் உள்ள rue Copernic synagogue வீதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் நால்வர் கொல்லப்பட்டும், 46 பேர் காயமடைந்தும் இருந்தனர்.
அதே வருடத்தில் லியோன் நகரில் உள்ள துருக்கிய தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் இருவர் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்தும் உள்ளனர். இரு ஆர்மேனிய நாட்டு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1980 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குகளினால் நிறைந்த ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது.