இல் து பிரான்ஸ் மாவட்டங்கள் முழுவதும் பலத்த மழை எச்சரிக்கை..!

8 ஐப்பசி 2024 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 17630
இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஒக்டோபர் 9, புதன்கிழமை நண்பகலின் பின்னர் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Kirk என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி பிரான்சை நாளை கடக்க உள்ளது. அதை அடுத்து நாட்டின் பரவலான இடங்களில் மழை மற்றும் வேகமான காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல் து பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி வீசும் சில நிமிடங்களில் 60 மி.மீ மழை வரை பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை இரவு இல் து பிரான்சின் பல இடங்களில் மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025