Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள்!! (பகுதி 2)

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள்!! (பகுதி 2)

16 பங்குனி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19424


1972 ஆம் ஆண்டு ஒன்பது பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிரான்ஸ், அதற்கு அடுத்த வருடம் (1974 ஆம் ஆண்டு) 14 பயங்கரவாத தாக்குதல்களை எதிகொண்டது. 
 
அவற்றில் பல தாக்குதல்கள் மிக சிறிய  அளவிலான தாக்குதல். அவ்வருடத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். 
 
1974 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் இரட்டிபானது. அவ்வருடத்தில் 29 பயங்கரவாத தாக்குதல் பிரான்சில் இடம்பெற்றது. இதில் மூவர் கொல்லப்பட்டும், 32 பேர் காயமடைந்தும் இருந்தனர். 
 
1975 ஆம் ஆண்டு 39 தாக்குதல்கள் இடம்பெற்றது. அதில் மூவர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். 
 
1976 மற்றும் 1977 ஆம் ஆண்டில் 58 மற்றும் 53 என தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. இவ் இரு வருடங்களைச் சேர்ந்தும் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 17 பேர் காயமடைந்தனர். 
 
1978 ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல் பிரான்சில் மிக தீவிரமடைந்தது. அவ்வருடத்தில் மட்டும் 59 தாக்குதல்கள் இடம்பெற்றதோடு 21 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். 
 
1979 ஆம் ஆண்டு இருநூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. 
 
(நாளை)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்