Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள்!! (பகுதி 1)

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள்!! (பகுதி 1)

13 பங்குனி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19230


பிரெஞ்சு தேசம் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்துகொண்டிருந்தாலும், இங்கு நீண்டகால தீரா தலைவலி ஒன்று உண்டு.
 
பயங்கரவாதம்!! 
 
ஒவ்வொரு அரசுக்கும் இந்த பயங்கரவாதம் பெரும் சவாலான ஒரு விடயம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றே வருகின்றன. 
 
சொன்னால் நம்புவீர்களா..?? கடந்த 1972 ஆம் ஆண்டில் இருந்து 2020 நடப்பு ஆண்டு வரை தொடர்ச்சியாக ஒருவருடம் கூட தவறாமல் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 
 
இந்த பிரெஞ்சு புதின தொடரில் 1970 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக விரிவாக பார்க்கலாம். 
 
1970... 1971 ஆகிய இரு ஆண்டுகளும் பிரான்சில் எவ்வித பயங்கரவாத தாக்குதல்களும் இடம்பெறவில்லை. 1972 ஆம் ஆண்டில் பிரான்சில் ஒன்பது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன.  
 
இந்த தாக்குதல்களில் ஒருவர் மட்டுமே பலியாகியிருந்தார். 
 
ஒருவருடன் 1972 ஆம் ஆண்டு பலி எண்ணிக்கையை ஆரம்பித்த பயங்கரவாதம், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலைவிரித்தாடியது. 
 
ஒரு கொடூரமாக அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாரானது. 
 
(நாளை) 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்