Paristamil Navigation Paristamil advert login

நயன்தாராவால் அலறும் தயாரிப்பாளர்கள்...

நயன்தாராவால் அலறும் தயாரிப்பாளர்கள்...

9 ஐப்பசி 2024 புதன் 14:31 | பார்வைகள் : 1160


திருமணம் ஆன பின்னர் சில நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து, பட வாய்ப்புகள் குறைந்து விடும். ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு தான் பாலிவுட் திரையுலகில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். திருமணம் ஆகி தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள நயன்தாரா, 'ஜவான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் முன்பை விட பல மடங்கு சம்பளத்தை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. 

இவர் கேட்டும் சம்பளத்தை அள்ளி கொடுக்கவும் பல முன்னணி தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். காரணம் மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் வரவேற்பு தான். நயன்தாரா சிறந்த கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்கிற எண்ணம் ரசிகர்கள் மனதில் உள்ளது. எனவே நயன்தாரா தங்களின் படத்தில் நடித்தால் அது படத்திற்க்கு கூடுதல் பலம் என இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் கூட நம்புகிறார்கள்.

அதே போல் நயன்தாரா ஒரு படத்தின் கதையை கேட்டு விட்டு... கை நீட்டி அட்வான்ஸ் வாங்கி விட்டால். இயக்குனருக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல்... கால்ஷீட் கொடுத்த நாளில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து கொடுத்து விட்ட பின்னரே மற்ற படங்களில் நடிக்க செல்வார். ஷூட்டிங் வருவதிலும் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது என்கிற நல்ல பெயரும் திரையுல வட்டாரத்தில் இவருக்கு உண்டு. அதே போல் யார் பிரச்சனைக்கும் செல்லாமல் தான் உண்டு.. தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் நயன்தாரா மீது பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு பல நல்ல பெயர் இருந்தாலும், நயன்தாரா சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதும், படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறுவதும் நெருடலான விஷயம் என்றாலும், இந்த கண்டீஷன்களுக்கு உடன் பட்டால் மட்டுமே நயன்தாரா அந்த படத்தில் நடிக்க சம்பாதிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதை தாண்டி... சமீப காலமாக நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டி குறித்து தான் தயாரிப்பாளர் ஆனந்தன் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். நயன்தாரா தன்னுடைய மகன்களை விட்டு பிரிந்திருக்க முடியாமல், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே அழைத்து வருவதாக, திரைப்பட தயாரிப்பாளரும், யூடியூபருமான ஆனந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

நயன்தாரா தனது குழந்தைகளுடன் சேர்த்து இரண்டு ஆயாக்களை படத்தின் செட்டுக்கு அழைத்து வருவது மட்டும் இன்றி , இரண்டு ஆயாக்களுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தான் வழங்க வேண்டும் என நிர்பந்திப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இது நியாமா? என கேள்வி எழுப்பியதோடு தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆயாக்களைக் கொண்டுவந்தால், நீங்கள் தானே சம்பளம் தர வேண்டும்? தயாரிப்பாளர் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்