Paristamil Navigation Paristamil advert login

மதுபோதையில் தந்தைக்கு ஒன்பது தடவைகள் கத்திக்குத்து... மகன் கைது!

மதுபோதையில் தந்தைக்கு ஒன்பது தடவைகள் கத்திக்குத்து... மகன் கைது!

9 ஐப்பசி 2024 புதன் 15:26 | பார்வைகள் : 6504


ஒன்பது தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட அவரது 17 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Vigneux-sur-Seine (Essonne) நகரில் இச்சம்பவம், ஒக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 44 வயதுடைய ஒருவர் சரமாரியாக கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். ரக்பி கழகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அவரது மகன், நிறைந்த மது போதையில் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

மகன் மதுபோதையில் இருந்ததன் காரணமாக தந்தைக்கு கடும் கோபம் வர, தந்தைக்கும் -மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் முடிவில் மகன் சமையலறையில் உள்ள கத்தி ஒன்றை எடுத்து, தந்தையைக் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உயிராபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும், அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்