லெபனானுக்கு உதவ சர்வதேச மாநாடு.. - ஏற்பாடு செய்கிறது பிரான்ஸ்!

9 ஐப்பசி 2024 புதன் 15:59 | பார்வைகள் : 7458
லெபனானில் யுத்தம் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர, பிரான்சின் முன் முயற்சியுடன் சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 24 ஆம் திகதி இந்த மாநாடு இடம்பெற உள்ளதாக இன்று ஒக்டோபர் 9 பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியுள்ளது. இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், மேலும் பல சர்வதேச அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
லெபனானில் நிரந்த யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவரத்தேவையான அனைத்து வழிமுறைகளையும் கண்டறியும் சந்திப்பாக இது அமையும் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பரிசில் இந்த மாநாடு இடம்பெற உள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகிறது.