Périphérique : விதியை மீறினால் - நாளை முதல் தண்டனைக்குரிய குற்றம்!!

9 ஐப்பசி 2024 புதன் 19:00 | பார்வைகள் : 12787
’சுற்றுவட்ட வீதி’ என அழைக்கப்படும் Périphérique சாலையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கி.மீ என மட்டுப்படுத்தப்பட்டமை அறிந்ததே. நாளை ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இந்த வேகக்கட்டுப்பாட்டை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படுகிறது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் Périphérique வீதிக்கு 50 கி.மீ வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை மணிக்கு 70 கி.மீ வேகத்துக்கு மேல் பயணித்தால் மட்டுமே ரேடார் கருவிகள் அதனை கண்டுபிடிக்கும் படி இருந்தது. சட்டம் கொண்டுவரப்பட்டு பத்து நாட்களின் பின்னர், நாளை முதல் குறித்த 50 கி.மீ வேகத்தை மீறி பயணிக்கும் வாகனங்களை ரேடார் கருவிகள் குறிவைத்து குற்றப்பணம் அடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுவட்ட வீதியில் புதிய வேகக்கட்டுப்பாட்டை அறிவிக்கும் 160 சமிக்ஞை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025