பரிசுக்கு வருகை தரும் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky !!
10 ஐப்பசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 12907
உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky, இன்று ஒக்டோபர் 10 வியாழக்கிழமை பரிசுக்கு வருகை தரவுள்ளார். பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து Volodymyr Zelensky இனை ஜனாதிபதி மக்ரோன் வரவேற்க உள்ளார்.
’உக்ரேனுக்கும் உக்ரேனிய மக்களுக்கும் பிரான்ஸ் தனது நீண்டகால ஆதரவை வழங்குவதற்கான உறுதியை மீண்டும் தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது!’ என எலிசே மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று ஒக்டோபர் 9 ஆம் திகதி ஜனாதிபதி மக்ரோன் Grand-Est மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு உக்ரேனிய இராணுவத்தினருக்கு பிரான்ஸ் சிறப்பு பயிற்சிகள் வழங்கி வருகிறது. அதனை மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

























Bons Plans
Annuaire
Scan