Paristamil Navigation Paristamil advert login

CGT தொழிற்சங்கம்! - சில அடடா தகவல்கள்...!!

CGT தொழிற்சங்கம்! - சில அடடா தகவல்கள்...!!

2 பங்குனி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19229


பிரான்சில் எத்தனையோ தொழிலாளர் சங்கம் உள்ளது. ஆனால் செய்தி தாள்களில் அதிகம் அடிபடும் பெயர் CGT. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த தொழிற்சங்கம் குறித்த சில தகவல்களை இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
Confédération Générale du Travail என்பதன் சுருக்கம் தான் CGT. தமிழில் சொல்வதென்றால் <<தொழிலாளர் பொது கூட்டமைப்பு>> என்று சொல்லலாம். 
 
 
1895 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்கத்துக்கு தற்போது வயது 125. 
 
பிரான்சில் உள்ள இரண்டாவது பெரிய தொழிற்சங்கம் இதுவாகும். (அப்போ முதலாவது எது? அடுத்த பிரெஞ்சு புதினத்தில் சொல்கின்றோம்.) இந்த தொழிற்சங்கத்தில் 710,000 பணியாளர்கள் உள்ளனர். அனைத்து துறைகளையும் சேர்ந்து. விமானம், தொடருந்து, தனியார் என நீங்கள் எந்த திசையில் சென்றாலும் அங்கு ஒரு CGT தொழிலாளியை பார்க்கலாம்.
 
ஆர்ப்பாட்டம்ம்..??!!  
 
அதற்கென்றே பெயர் போன மிக முக்கியமான தொழிற்சங்கம் இதுதான். எந்த ஒரு போராட்டத்திலும் CGT இன் சிவப்பு மஞ்சள் கொடி பறக்கும். 
 
அவ்வளவு ஏன், CGT Union என்று கூகுளில் தேடினாலே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போட்டோக்கள் தான் முதலில் வரும். அட கடவுளே...
 
பிரான்சின் மத்திய நகரமான Montreuil இல் ஆரம்பிக்கப்பட்டது இந்த தொழிற்சங்கம். இன்று தொடருந்து போக்குவரத்துக்களில் பிரதானமாக உள்ள ஊழியர்கள் அனைவரும் இந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களே...
 
இந்த தொழிற்சங்கத்தலைவர் நீங்க அறிந்தவர் தான். Philippe Martinez. தினமும் இவரைப்பற்றிய செய்தி ஒன்றை பத்திரிகையின் எந்த ஒரு மூலையில் ஆவது படித்துவிடலாம். மிஸ்ட்டர். பரபரப்பு..!! 
 
இப்படியாக பிரான்சில் இந்த CGT நிலைகொண்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்