யாழில் ரயில் மோதி குடும்பஸ்தர் மரணம்
10 ஐப்பசி 2024 வியாழன் 11:26 | பார்வைகள் : 4802
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் ஒரு பிள்ளை கனடாவிலும், மற்றைய பிள்ளை இந்தியாவிலும் வசித்து வருகின்ற நிலையில் குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (09) மாலை, சுன்னாகம் - மயிலணி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் வைத்து ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை ரயில் அவர் மீது மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan