Préfecture de police de Paris - சில ஆச்சரிய தகவல்கள்..!!
14 மாசி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18963
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிஸ் காவல்துறையினரான Préfecture de police de Paris குறித்து சில முக்கிய தகவல்களை அறிந்துகொள்வோம்.
பிரான்சில் எத்தனையோ பாதுகாப்பு படை இருந்தாலும், பரிசுக்கும் சரி இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கும் சரி, இவர்கள் தான் ஹீரோ..!
Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து பிராந்தியங்களையும் மிகுந்த பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கை, கடத்தல், கொள்ளை, கொலை, ஆப்பாட்டம், போராட்டம் என எங்கு எது நடந்தாலும் பாதுகாப்புக்கு வந்துவிடுவார்கள் எமது Préfecture de police de Paris அதிகாரிகள்.
மிகச்சரியாக சொல்லவேண்டும் என்றால் இந்த காவல்படை 1667 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக 1789 ஆம் ஆண்டு இப்படை இரத்துச் செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் 1800 ஆம் வருடம் இந்த படை மீண்டும் உருவாக்கப்பட்டது. இவ்வருடத்தோடு 220 வருடங்களாக இடைவிடாது சேவையில் இருக்கின்றது Préfecture de police de Paris.
இல்-து-பிரான்சுக்குள் மொத்தம் 87 காவல்நிலையங்கள் இவர்கள் வைத்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கை 34,000.
Île de la Cité பகுதியில் மிக பாதுகாப்பாக இவர்களின் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. (சமீபத்தில் கூட இங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தாரே.??!!)
மக்கள் பாதுகாப்பிற்கு இவர்களது பங்கு அளப்பரியது. பொது சொத்துக்கள், தனி நபர் சொத்துக்களை பாதுகாப்பது, போக்குவரத்து, பொதுமக்கள் சுகாதாரம், கால்நடை சேவை, மனித வளம் என இவர்கள் பொதுமக்களுக்காக சகல வழிகளிலும் பாதுகாப்பை நல்கின்றனர்.