Paristamil Navigation Paristamil advert login

அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகளின சந்திப்பு - ரஷ்ய தகவல்

அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகளின சந்திப்பு - ரஷ்ய தகவல்

11 ஐப்பசி 2024 வெள்ளி 04:17 | பார்வைகள் : 1654


அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகள் இணைந்து நியூயார்க் நகரில் முக்கியமான சந்திப்பு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக  ரஷ்ய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வியாழக்கிழமை குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய 5 நாடுகள் இணைந்தே, சந்திக்க இருப்பதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சந்திப்பானது எப்போது முன்னெடுக்கப்படும், இந்த சந்திப்பில் யார் யார் அல்லது எந்த மட்டத்திலான அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை அமைச்சர் ரியாப்கோவ் வெளியிட மறுத்துள்ளார்.

உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே அணு ஆயுத பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், தங்கள் அணு ஆயுத திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மாதம் அறிவித்திருந்தார். மேலும், உக்ரைனுக்கு தமது ராணுவத்தை அனுப்பும் முன்னர், 2022 ஜனவரி மாதம் இந்த 5 நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் இந்த 5 நாடுகளுக்கும் இடையே ஒருபோதும் போர் முன்னெடுப்பதில்லை. மட்டுமின்றி, அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதை தவிர்ப்பது முதன்மையான முன்னுரிமை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மட்டுமின்றி, அணுவாயுதப் போரால் வெற்றியை உறுதி செய்ய முடியாது, ஒருபோதும் போர் என்பது தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்றும் 5 நாடுகள் ஒன்றாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்