Paristamil Navigation Paristamil advert login

Yvelines : கனரக வாகனத்தில் கடத்தப்பட்ட 130 கிலோ கொக்கைன்.. இருவர் கைது!!

Yvelines : கனரக வாகனத்தில் கடத்தப்பட்ட 130 கிலோ கொக்கைன்.. இருவர் கைது!!

11 ஐப்பசி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 5360


கனரக வாகனம் ஒன்றில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 130 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Yvelines நகரில் உள்ள Saint-Arnoult சுங்கச்சாவடியில் வைத்து செவ்வாய்க்கிழமை பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயினில் இருந்து வருகை தந்த குறித்த கனரக வாகனத்தினை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட சுங்கவரித்துறையினர், அப்பள பெட்டிகள் போன்று பொதியிடப்பட்ட பெட்டிகளை சோதனையிட்டனர்.

அதில் கொக்கைன் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாரதி மற்றும் உடன் பயணித்த ஒருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் பெறுமதி 8 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்