பரிஸ் உலகில் செலவீனம் அதிகம் கொண்ட நகரமா..?
12 மாசி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 18470
தலைப்பில் உள்ள இந்த கேள்விக்கு நேரடியான பதில் 'ஆம்' என்பதே.
Economist Intelligence Unit எனும் நிறுவனம் வருடா வருடம் இந்த ஆய்வை மேற்கொள்கின்றது. உலகில் உள்ள நகரங்களில் அதிக செலவீனங்கள் கொண்ட நகரம் எது எனும் பட்டியலில், 2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது பரிஸ்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், பரிஸ் இரண்டாம் இடத்திலும் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் பரிஸ் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. (நல்ல முன்னேற்றம் பாஸ்..)
குறித்த நிறுவனம், உலகில் உள்ள 133 நகரங்களை எடுத்துக்கொண்டு, 'மின்சாரம், தண்ணீர், வீட்டு வாடகை, வாகன தரிப்பிட கட்டணம், கல்வி கட்டணம்....' என மொத்தம் 150 விடயங்களுக்கான விலையை எடுத்துக்கொண்டு தராசில் அடுக்குகின்றது.
பின்னர் அந்தந்த நகர விலைவாசி செலவீனங்களை கொண்டு பட்டியல் தயாரித்தால், முதல் இடத்தில் வந்து நிற்கின்றது பரிஸ்.
சோகம் என்னவென்றால் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து முதல் 10 இடங்களுக்குள் அங்கேயும் இங்கேயும் என சுழன்ற பரிஸ்... தற்போது முதலாம் இடத்தை பிடித்துள்ளது.
சரி ஒரு தகவலுக்காக..., இந்த 133 நகரங்களில் இறுதியில் உள்ள 'செலவீனம் குறைந்த நகரம்' எது என தெரியுமா?? அது வெனிசுலாவின் Caracas நகரம் ஆகும்..
என்னது... பரிசை காலி செய்துகொண்டு லியோன் பக்கம் மார்செ பக்கம் போகப்போகின்றீர்களா..??!