இலங்கையில் சீரற்ற காலநிலை - எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
11 ஐப்பசி 2024 வெள்ளி 10:24 | பார்வைகள் : 5148
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேச மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan