Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

இலங்கை ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

11 ஐப்பசி 2024 வெள்ளி 12:35 | பார்வைகள் : 8802


அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக 3,000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 
 
இடைக்காலக் கொடுப்பனவான 3,000 ரூபாய் ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். 
 
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்