Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு கிரிக்கெட் அணியின் தலைவர் ஒரு தமிழரா..?

பிரெஞ்சு கிரிக்கெட் அணியின் தலைவர் ஒரு தமிழரா..?

25 ஐப்பசி 2021 திங்கள் 13:30 | பார்வைகள் : 20901


நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் பிரான்சுக்கு உண்டான கிரிக்கெட் அணி குறித்து சில தகவல்களை தெரிவித்திருந்தோம். அதில் சொல்ல மறந்த கதை ஒன்று உண்டு.

பிரெஞ்சு கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் பெயர் அருண்குமார்.

என்ன…? ஆச்சரியமாக இருக்கா..? அருண்குமார் என ஒரு பெயரா..? ஆமாம்… அருண்குமாரே தான். தமிழ் பெயர் போல் இருக்கே என ஆச்சரியமாக இருக்கிறதா...? இவரின் அப்பா பெயர் அய்யாவூராஜு. பூர்வீகம் தெலுங்கு. அருண்குமார் பிறந்தது இந்தியாவின் பாண்டிச்சேரியில்.

சிறுவயது முதல் கிரிக்கெட் என்றால் இவருக்கு மிகுந்த விருப்பம். தன் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடி.. பின்னாளில் பிரெஞ்சு கிரிக்கெட் அணிக்கே ‘கேப்டன்’ ஆகியுள்ளார்.

வலது கை ஆட்டக்காரரான இவர், நடுத்தர வேகத்தில் பந்தும் வீசக்கூடியவர்.

உத்தியோகபூர்வமாக அவர் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர் என்றபோதும்… அவரது பூர்வீகம் இந்தியா தான்.

சொல்ல மறந்திட்டோமே.. அருண்குமாருக்கு நன்றாக தமிழ் தெரியும்.. அவருடன் தற்போது அணியில் விளையாடும் பலரும் பாண்டிச்சேரியில் இருந்து சென்றவர்கள் தான்.

ஆச்சரியமாக இருக்குல்ல..? 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்