Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் 2028 ஆம் ஆண்டு வரை - ஒலிம்பிக் வளையங்கள்..??!!

ஈஃபிள் கோபுரத்தில் 2028 ஆம் ஆண்டு வரை - ஒலிம்பிக் வளையங்கள்..??!!

6 புரட்டாசி 2024 வெள்ளி 17:16 | பார்வைகள் : 1645


ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்களை அகற்றுவது தொடர்பில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. குறித்த வளையங்களை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என ஒரு தரப்பும், அகற்றப்படவேண்டும் என ஒரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.

இநிலையில், இது தொடர்பில் பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ தெரிவிக்கையில், 2028 ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் வரை குறித்த ஒலிம்பிக் வளையங்கள் அங்கேயே இருப்பதை தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டில் Los Angeles நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளன. சோம்ப்ஸ்-எலிசேயில் இருந்து ஒலிம்பிக் தீபம்Los Angeles நகருக்கு எடுத்துச் செல்லப்படும். அதுவரை ஒலிம்பிக் போட்டிகளின் உரிமை பரிசிடமே இருக்கும். எனவே அதுவரை ஒலிம்பிக் வளையங்களை நாம் வைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை. ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வளையங்களை 2028 வரை வைத்திருப்பதை நான் விரும்புகிறேன் என ஆன் இதால்கோ தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்