Paristamil Navigation Paristamil advert login

சீன கரையை கடக்கும் மிக சக்தி வாய்ந்த யாகி சூறாவளி!

சீன கரையை கடக்கும் மிக சக்தி வாய்ந்த யாகி சூறாவளி!

7 புரட்டாசி 2024 சனி 05:11 | பார்வைகள் : 2267


சீன நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தீவான ஹெய்னனின் கரையை  யாகி சூறாவளி கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 4 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தொடருந்துகள், படகுகள், வானூர்திகள் என்பனவற்றின் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தவிர தென் பிராந்தியத்தை அண்மித்த பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.


யாகி சூறாவளி இந்த வார ஆரம்பத்தில் வட பிலிப்பைன்ஸில் பாரிய அழிவை ஏற்படுத்தியதன் பின்னர், அதன் வலு இரட்டிப்பாகி தற்போது மணிக்கு 240 கிலோ மீற்றர் வேகத்தில் வீசி வருகின்றது.

சீனா நாட்டின் அதிக மக்கள் தொகையை கொண்ட மாகாணமான ஹெயினன் மற்றும் அண்டை மாகாணமான குவான்டொங் என்பனவற்றிற்கு இந்த சூறாவளி பேரழிவினை ஏற்படுத்தக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


ஹெய்னனின் நிர்வாக அதிகாரிகள் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய காற்று வீசும் என தெரிவித்து, நேற்றையதினம் (05-09-2024) முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இது தவிர உலகின் மிக நீளமான ஹொங்கொங்கை இணைக்கும் பாலமும் மூடப்பட்டுள்ளது.


பிராந்தியத்தின் சில பகுதிகளில், ஏற்கனவே கடுமையான மழையுடனான வானிலை பதிவாகியுள்ளது. மேலும், 500 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என வானிலை அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்