பிரான்சும் - கிரிக்கெட்டும்.. இன்னும் சில இதிகாசங்களும்..!
24 ஐப்பசி 2021 ஞாயிறு 12:31 | பார்வைகள் : 20572
பிரான்சில் உள்ள கிரிக்கெட் டீம் குறித்து பிரெஞ்சு மக்களுக்கே தெரியாது என்பது நீங்கள் அறிந்தது தான். ‘கிரிக்கெட்டா..? அதையெல்லாம் எவன் மைதானத்தில் இருந்து பார்ப்பான்?’ என பிரெஞ்சு மக்கள் சலித்துக்கொள்வதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
பிரான்ஸ் என்றில்லை.. ஐரோப்பாவிலேயே ‘கிரிகெட்’ என்றால் எவருக்கும் பெரிய ஆர்வம் இல்லை. அட.. கிரிக்கெட்டினை கண்டுபிடித்த இங்கிலாந்திலேயே அதுகுறித்து எவரும் சீண்டுவார் இல்லை. இங்கிலாந்து சென்றமுறை உலகக்கோப்பை வென்றபோது அங்குள்ள செய்தி தாளில் பின் பக்கம் குட்டியாக ‘கட்டமிடப்பட்ட’ செய்தியாகவே அதை வெளியிட்டிருந்தார்கள். தொலைகிறது…
‘கிரிக்கெட் மற்றும் அதன் விதிமுறைகளை’ உருவாக்கியது இங்கிலாந்தாக இருந்தாலும்… இந்த ‘ரூல்ஸ்’கள் உருவாகுவதற்கு முன்னரே பிரான்சில் கிரிக்கெட் விளையாடினார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
வாய்வழி கதைகள் போல்.. வாய்வழி பரவிய விளையாட்டுக்களும் உண்டு. நினைத்துப்பாருங்கள்.. உங்களுக்கு கிளித்தட்டும், கபடியும் யார் சொல்லி தந்தார்கள்.. தொலைக்காட்சி பார்த்தா விளையாடினீகள்..??
அதேபோல் இந்த கிரிக்கெட்டை கிட்டத்தட்ட 1478 ஆம் ஆண்டு பிரான்சில் விளையாடியதற்கு சான்றுகள் உண்டு. இதனை Criquet என அழைத்தார்கள். Criquet என்றால் ‘விக்கெட்’ என அர்த்தம்.
முன்னாள் பிரித்தானிய பிரதமர் Robert Walpole இன் மகன் Horace Walpole “பரிசில் 1766 ஆம் ஆண்டு மக்கள் கிரிக்கெட் விளையாடியதை பார்த்ததாக” குறிப்பிட்டுள்ளார்.
‘ஓ.. இதுதான் கிரிக்கெட்டா..?’ என தெரியாமலேயே காலகாலமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட்டை.. பின்னர் அதற்கு பெயர் சூட்டி.. மலர் வளையம் வைத்து ‘ரூல்ஸ்’ உருவாக்கி சர்வதேச விளையாட்டாக மாற்றி விட்டார்கள்.
சுபம்.