Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமலே பூமிக்குத் திரும்பியது விண்வெளிக்குச் சென்ற விண்கலம்

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமலே பூமிக்குத் திரும்பியது விண்வெளிக்குச் சென்ற விண்கலம்

7 புரட்டாசி 2024 சனி 08:01 | பார்வைகள் : 5851


சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரை விண்வெளிக்குக் கொண்டு சென்ற விண்கலம், அவர்கள் இருவரும் இல்லாமலே பூமிக்குத் திரும்பியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரான Butch Wilmore ஆகிய இருவரும், ஜூன் மாதம் 5ஆம் திகதி, போயிங் நிறுவனத்தின் Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார்கள்.

அவர்கள் பயணித்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அதை சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் இறங்கினார்கள். ஆனால், அதை இதுவரை சரி செய்யமுடியவில்லை.

அதனால், விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் Butch Wilmoreம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

அத்துடன், இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய சுனிதாவும் Wilmoreம், அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இந்நிலையில், சுனிதாவையும் Butch Wilmoreஐயும், சுமந்து சென்ற போயிங் நிறுவனத்தின் Starliner விண்கலம், பூமிக்குத் திரும்பியுள்ளது.


ஆனால், அதில் சுனிதாவும் Butch Wilmoreம் பயணிக்கவில்லை. அவர்கள் இருவரும் இல்லாமலேயே பூமிக்குத் பூமிக்குத் திரும்பியுள்ளது Starliner விண்கலம்.

அமெரிக்காவின் New Mexicoவிலுள்ள White Sands என்னுமிடத்தில் அமைந்துள்ள விண்வெளி நிலையத்தில், இன்று அதிகாலை 12.01 மணிக்கு Starliner விண்கலம் தரையிறங்கியுள்ளதாக சற்று முன் வந்த செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்