Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பயங்கர ரேபிஸ் நோய் கண்டுபிடிப்பு

கனடாவில் பயங்கர ரேபிஸ் நோய் கண்டுபிடிப்பு

7 புரட்டாசி 2024 சனி 08:33 | பார்வைகள் : 6874


கனேடிய மாகாணமொன்றில், 60 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக மனிதர்களில் பயங்கர நோயான ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வௌவால் ஒன்றிடமிருந்து அவருக்கு அந்நோய் பரவிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஒருவருக்கு ரேபிஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, யாராவது ரேபிஸ் வைரஸை தன் உடலில் சுமக்கக்கூடிய எந்த விலங்கையாவது தொட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அலுவலர்கள் மக்களைக் அறிவுறுத்தியுள்ளார்கள்.

ரேபிஸ் வைரஸை தன் உடலில் சுமக்கக்கூடிய விலங்குகளின் எச்சில் போன்றவை மனிதர்கள் மேல் படும்போது, அதிலிருந்து ரேபிஸ் வைரஸ் மனிதர்களுக்கு பரவும்.

மூளையையும் தண்டுவடத்தையும் இந்த ரேபிஸ் வைரஸ் பாதிக்கும். என்றாலும், உரிய நேரத்தில் முறையான சிகிச்சையளித்தால் இந்த ரேபிஸ் வைரஸ் தொற்றை கிட்டத்தட்ட 100 சதவிகிதம் குணமாக்கிவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


இந்த ரேபிஸ் தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதாக இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்