Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் மரண தண்டனை ஒழிக்க காரணமாக இருந்தவர்..!

பிரான்சில் மரண தண்டனை ஒழிக்க காரணமாக இருந்தவர்..!

21 ஐப்பசி 2021 வியாழன் 16:00 | பார்வைகள் : 20562


பிரான்சில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளன. இந்த மரண தண்டனையை ஒழிக்க காரணமாக இருந்தவர் ஒருவரே. அவரின் பெயர் Robert Badinter.

இன்றைய பிரெஞ்சு புதினம் அவர் குறித்து தான். இதற்கு முன்னர் ஒரு குட்டி ப்ளாஷ்பேக்!

1971 ஆம் ஆண்டு இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ஒருவன் பெயர் Claude Buffet இரண்டாமவன் பெயர் Roager Bontems.

இருவரும் சேர்ந்து ஒரு தாதியையும், சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவரையும் பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். பின்னர் அவர்களை இவர்கள் கொலையும் செய்துள்ளனர்.

இந்த கொலை குற்றத்துக்காக இவ் இருவருக்கும் நீதிமன்றம் ‘மரண தண்டனை’ விதித்தது. அப்போது இவர் வழக்கறிஞராக இருந்தவர் தான் Robert Badinter. இந்த வழக்கில் மரண தண்டனை தீர்வாகாது என பல விதங்களில் வாதாடி பார்த்தார். அது சரிவரவில்லை.

அதன் பின்னர் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றது. 1976 ஆம் ஆண்டு, தொலைக்காட்சி பிரபலமான Patrick Henry ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். 8 வயது சிறுவன் ஒருவனை கடத்தி அவனை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் சில நாட்கள் கழித்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் தொலைக்காட்சியில் ‘கடத்தப்பட்ட சிறுவன் இறப்பதற்கு தகுதியுடையவன்’ என உளறி கொட்டியதால், காவல்துறை மீண்டும் அவரை கைது செய்தது.

பின்னர் அவரது வீட்டின் அறையை சோதனையிடப்பட்ட போது கட்டிலின் கீழ் சிறுவனின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இப்போது அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என விவாதம் எழுந்தது.

இப்போதும் மரண தண்டனை தேவையற்றது, ஆயுள் தண்டனையே போதுமானது என Robert Badinter வாதாடினார்.

இந்த வழக்கு சில வருடங்கள் நீடித்தது. 1981 ஆம் ஆண்டு Robert Badinter நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் François Mitterrand. இவரது தலைமையின் கீழ் Robert Badinter போராடி, பிரான்சில் மரண தண்டனை வழக்கத்தை இல்லாதொழித்தார். சட்டத்தில் மாற்றங்கள் பல கொண்டுவந்தார்.

இவ்வாறாக ஒக்டோபர் 9 ஆம் திகதி 1981 ஆம் ஆண்டு பிரெஞ்சு சட்ட திருத்தத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. தற்போது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 வருடங்கள் ஆகின்றன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்