பிரெஞ்சு ரேடியோக்களுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா.?!
20 ஐப்பசி 2021 புதன் 12:30 | பார்வைகள் : 20473
பிரெஞ்சு ரேடியோக்களுக்கு என ஒரு கட்டுப்பாடு உண்டு. உலகில் வேறு எங்கேனும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் உள்ளதா தெரியவில்லை.. ஆனால் பிரான்சில் உண்டு.
அதாவது ரேடியோவில் ஒலிபரப்படும் பாடல்களில் 35% வீதமானவை ‘பிரெஞ்சு பாடல்களாக’ தான் இருக்கவேண்டும். கட்டாயமாக!
பிரெஞ்சு ரேடியோக்களில் பிரெஞ்சு பாடல் தானே போட வேண்டும்.. இதில் என்ன ஆச்சரியம்..? என நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஆங்கில ரேடியோவே நடத்தினாலும்.. உத்தியோகபூர்வமாக தமிழ் ரேடியோவே நடத்தினாலும் அதில் பத்தில் மூன்று பாட்டு பிரெஞ்சு பாடலாக தான் இருக்கவேண்டும். (ஒன்லைன் ரேடியோக்கள் இதில் அடங்காது)
முன்னதாக 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டு 40% வீதம் ‘பிரெஞ்சு’ பாடல்கள் ஒலிபரப்ப வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.
பின்னர் இந்த சட்டத்தை 2016 ஆம் ஆண்டு 35% வீதமாக கொண்டுவரப்பட்டது.
பிரெஞ்சு மொழியை அரசு கட்டிக்காப்பது நீங்கள் அறிந்ததே. கடையில் விற்பனையாகும் பொருட்களிலும், பதாதைகளிலும் எங்கும் பிரெஞ்சு நிறைந்திருப்பதை காணலாம். இதற்கெல்லாம் மொழி மீதான காதல் தான் காரணம்.