Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் நாளை!

இலங்கையில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் நாளை!

7 புரட்டாசி 2024 சனி 17:33 | பார்வைகள் : 2179


2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை சுமார் 30 இலட்சம்  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,எதிர்வரும்14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளை (08) அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாளை ஞாயிற்றுக்கிழமை என்றாலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக வழங்க உள்ளோம்.

"எனவே, குடியிருப்பாளர்கள் நாளை வீட்டிலேயே இருக்குமாறும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை கையொப்பங்களுடன் பெறுமாறும் கோரப்படுகிறது." என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்