Paristamil Navigation Paristamil advert login

வெள்ளத்தில் மூழ்கியது லூர்து திருத்தளம். வழிபாடுகள் நடக்கின்றதா?

வெள்ளத்தில் மூழ்கியது லூர்து திருத்தளம். வழிபாடுகள் நடக்கின்றதா?

7 புரட்டாசி 2024 சனி 17:50 | பார்வைகள் : 4755


பிரான்ஸின் தென்மேற்கு பகுதியான les Pyrénées-Atlantiques பிராந்தியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையை அடுத்தே லூர்து திருத் தளத்தில் la grotte மற்றும் le sanctuaire de Lourdes வளாகப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று கொட்டிய கடும் மழையால் Gave de Pau நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இதற்கு காரணம் என லூர்து தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1858 ஆம் ஆண்டில் பிரெஞ்சு சிறுமி Bernadette அவர்களுக்கு அன்னை மரியாள் நேரில் காட்சி கொடுத்த இடம் என நம்பப்படுகின்ற  'La grotte de Lourdes' எனப்படுகிறது ஒரு சிறிய குகையில் ஊற்றெடுக்கின்ற புனித நீரையே மருத்துவ குணங்கள் கொண்ட, கன்னி மரியாளின் திருப்பாதங்கள் பட்ட அதிசய தீர்த்தம் என உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களும் ஏனைய யார்த்திரிகர்களும்
நம்புகின்றனர். அந்த நீரூற்றுப் பகுதியையே தற்போது மழை வெள்ளம் மூடியுள்ளது.

சுத்திகரிப்புப் பணிகள் அங்கு நடைபெற்று தற்போது மீண்டும் la grotte மற்றும் le sanctuaire de Lourdes பகுதிகளுக்கு வழிபட பக்தர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்