பரிஸ் : ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல்.. நால்வர் கைது..!
.jpg)
7 புரட்டாசி 2024 சனி 18:27 | பார்வைகள் : 7962
ஓரினச்சேர்க்கையாளர்களான இரு ஆண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Canal Saint-Martin ஆற்றங்கரைக்கு அருகே நேற்று (செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 1 மணி அளவில் ஆற்றங்கரைக்கு அருகே நின்றிருந்த இரு ஆண்கள் மீது நால்வர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனும் காரணத்துக்காக இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
கண்ணாடி போத்தல் ஒன்றை அவர்களின் தலையில் அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளனர். தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அவர்கள் சில நிமிடங்கள் கழித்து 2அணி அளவில் கார் து நோர் நிலையம் அருகே வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.