வீட்டின் வாசற்படி கல் ரூ.9.2 கோடி ரூபாய்! ஆச்சரிய தகவல்
8 புரட்டாசி 2024 ஞாயிறு 07:06 | பார்வைகள் : 1077
தென்கிழக்கு ரோமானியாவில் கோடிக்கணக்கில் மதிப்பிலான கல்லை மூதாட்டி ஒருவர் வீட்டின் வாசப்படியாக பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு ரோமானியாவில் அமைந்துள்ள கிராமம் கோல்டி, இங்கு மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார்.
அவரது வீட்டின் வாசப்படி சற்று உயரமாக இருந்ததால் காலை தூக்கி வைத்து செல்ல சிரமப்பட்டுள்ளார்.
ஒருநாள் ஏதேச்சையாக அருகில் உள்ள ஓடைக்கு சென்ற போது, அங்கிருந்து கல் ஒன்றை எடுத்து வந்து வாசற்படியில் பயன்படுத்தி வந்துள்ளார்.
காலப்போக்கில் அப்பாட்டியில் மறைந்துவிட, உறவினர் மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
சற்று உன்னிப்பாக அந்த கல்லை கவனித்த போது சாதாரண கல் போன்று இல்லையே என தோன்றியுள்ளது.
உடனடியாக அதன் சிறுபகுதியை வெட்டி ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார், அங்கு தான், சுமார் 38.5 முதல் 70 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அம்பர் கல் என கண்டறியப்பட்டது.
மேலும் அதன் எடை 3.5 கிலோ என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பில் 9.2 கோடி ரூபாய் என்பதும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அந்த கல்லை கைப்பற்றிய அதிகாரிகள் அருங்காட்சியத்தில் வைத்துள்ளனர், உலகிலேயே இதுதான் அதிக எடைக்கொண்ட அம்பர் கல் என்பது குறிப்பிடத்தக்கது.
-----