அமெரிக்க ஓபன்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
8 புரட்டாசி 2024 ஞாயிறு 08:20 | பார்வைகள் : 1610
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா தனது முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்யிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.