ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் இத்தாலி பிரதமர் கருத்து

9 புரட்டாசி 2024 திங்கள் 05:32 | பார்வைகள் : 9631
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 925 நாளாக நீடித்து வருகிறது.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை.
இவ்வாறான நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று இத்தாலி கூறியுள்ளது.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறுகையில்,
உக்ரைன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும்." என்றார்.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று புடின் கூறியிருந்த நிலையில், இத்தாலி பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1