தண்ணீரில் மூழ்கி 79 பேர் சாவு! - திடீரென அதிகரித்த விபத்துக்கள்!
13 ஆடி 2021 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 20589
கடந்த ஒரு மாதத்தில் நீரில் மூழ்கி 79 பேர் சாவடைந்துள்ளனர். 300 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரையான நாட்களில், நாடு முழுவதும் நீரில் மூழ்கி 314 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரான்சின் பொது சுகாதார பணிமனை அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இதே நாட்களுடன் ஒப்பிடுகையில் இது 22% வீதம் அதிகமாகும்.
இதே காலப்பகுதியில் 79 பேர் சாவடைந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 58% வீதத்தால் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நீச்சல் தடாகங்கள், நீர் நிலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர். இதுவே இந்த சாவு எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.