Paristamil Navigation Paristamil advert login

மாவீரன் நெப்போலியன் பிரெஞ்சுக்காரரா, இத்தாலியரா.??

மாவீரன் நெப்போலியன் பிரெஞ்சுக்காரரா, இத்தாலியரா.??

8 ஆனி 2021 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 21625


மாவீரன் நெப்போலியன் பிரெஞ்சு இராணுவத்தில் பணிபுரிந்த மாவீரன். தீரா வேட்கையோடு இந்த உலகத்தையே ஜெயித்துவிடவேண்டும் என போர்க்குணம் கொண்டவன். 
 
கோர்சியா தீவில் பிறந்ததாலேயே இந்த ‘போராட்ட குணம் நெப்போலியனை சூழ்ந்துகொண்டது’ இதற்கு காரணமும் உண்டு. கோர்சியா தீவினை இப்போது பிரெஞ்சு அரசு காலனியாக கொண்டுள்ளதல்லவா... ஆனால் அதை முன்னதாக இத்தாலி அரசிடம் இருந்து வாங்கியிருந்தது. 
 
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் தான். 
 
ஆனால் மாவீரன் நெப்போலியன் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரா, அல்லது இத்தாலியைச் சேர்ந்தவரா என்பதில் சில குழப்பங்கள் உண்டு. 
 
1769 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி நெப்போலியன் பிறந்தார். அவர் பிறக்கும் போது அவர் பிறந்த கோர்சியா தீவு இத்தாலிக்கு சொந்தமாக இருந்தது. 
 
கோர்சியா தீவில் இருந்த அத்தனை பேரும் அப்போது இத்தாலியர்களே. அப்படியென்றால் நெப்போலியனும் தான். 
 
ஆனால்.. நெப்போலியன் பிறந்து 15 மாதங்கள் ஆன நிலையில், கோர்சியா தீவை பிரான்சிடம் விற்று விட்டு, கப்பல் ஏறி சென்றுவிட்டது இத்தாலி. 
 
கோர்சியா தீவை விலைக்கு வாங்கியது பிரெஞ்சு அரசு. அன்றில் இருந்து அங்கிருந்த மக்கள் அனைவரும் பிரெஞ்சு காரர்கள் ஆனார்கள். 
 
இத்தாலியோ, பிரான்சோ.. தங்களை ஆட்டி வைக்கும் முதலாளிகளை கோர்சிய மக்களுக்கு பிடிக்கவில்லை. போராட்டங்களும், இரகசிய குழுக்களும் ஆங்காங்கே தோன்றியது. உள்ளுக்குள் யுத்தம் வெடித்தது. ஆனாலும் பிரெஞ்சு அரசிடம் அந்த தாக்குதல் எடுபடவில்லை. 
 
அப்போது தான் நெப்போலியனுக்கு இதுபோன்ற போராட்டகுணம் உருப்பெற்றிருக்கவேண்டும்! 
 
எது எப்படியோ... நெப்போலினின் குடும்பத்தினர் அனைவரும் இத்தாலியர்களாகவே இருந்தனர். நெப்போலியன் பிறந்ததும் இத்தாலிக்கு சொந்தமான தீவிலேயே. அதனால் நெப்போலியன் பெரும் பாகம் இத்தாலியினைச் சேர்ந்தவரே!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்