ரஷ்யா எரிபொருள் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்
9 புரட்டாசி 2024 திங்கள் 09:03 | பார்வைகள் : 1979
ரஷ்யாவும் உக்ரைனும் அதன் எல்லைப் பகுதிகளில் ஒரே இரவில் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய இராணுவம், பலம் வாய்ந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவில் எரிபொருள் சேமிப்பு தளத்தைத் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக பல பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மூன்று இடங்களில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், சுமி பகுதியில் இருவர் உயிரிழந்ததுடன் 4 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் பெல்கோரோட் (Belgorod) பகுதியில், 2 சிறுவர்கள் உட்பட 3 பொதுமக்கள் காயமடைந்ததாக உக்ரைனிய பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.