Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் 21 ஆம் திகதி குவாட் அமைப்பு மாநாடு... 

அமெரிக்காவில் 21 ஆம் திகதி குவாட் அமைப்பு மாநாடு... 

9 புரட்டாசி 2024 திங்கள் 17:43 | பார்வைகள் : 810


அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. 

குவாட் அமைப்பின் 2024-ம் ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி காலம்  முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு மாநாடு இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைபெறும் என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருகிற 21ஆம் திகதி ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் வில்மிங்டனில் குவாட் உச்சிமாநாடு நடக்கிறது.

இதில் ஜோ பைடன், மோடி, ஆஸ்திரேலியா பிரதமர், ஜப்பானிய பிரதமர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஐ. நா. பொதுச்சபையின் அமர்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். 

இதையடுத்து அவர்கள் அமெரிக்காவில் நடக்கும் குவாட் மாநாட்டில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார்கள். 

இந்த ஆண்டுக்கு பதில் அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில் 22 ஆம் திகதி  இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுகிறார். 

22ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளின் ஐ.நா.வின் எதிர்கால மாநாட்டில் உரையாற்றுகிறார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்