பரிஸ் : மாணவியை தாக்கிய ஆசிரியர்.. வழக்குப் பதிவு..!

10 புரட்டாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 6909
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் மாணவியை அடித்து தண்டித்துள்ளார். மாணவியின் பெற்றோர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அங்குள்ள Frères-Voisins ஆரம்ப பாடசாலையில், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்த மறுநாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 3 வயதுடைய மாணவியை பெண் ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். இக்காட்சியை மாணவியி தாய் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து குறித்த ஆசிரியர் மீதும் பாடசாலை நிர்வாகத்தின் மீதும் மாணவியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்யதுள்ளனர். பாடசாலை நிர்வாகம் குறித்த ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளது.