திருச்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் Jabil தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
10 புரட்டாசி 2024 செவ்வாய் 07:42 | பார்வைகள் : 1232
திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.
5 ஆயிரம் பேருக்கு வேலை
இந்நிலையில், இன்று(செப்.,10) சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.