சுவிட்சர்லாந்தில் குடியுரிமைக் கட்டணம் குறைப்பு
10 புரட்டாசி 2024 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 1604
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்கள், குடியுரிமை பெறுவதற்காக கட்டணம் ஒன்றைச் செலுத்தவேண்டும்.
இந்த கட்டணம், மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல், பேசல் நகரத்தில் குடியுரிமை பெறுவதற்கான மாகாண கட்டணம், பாதியாக குறைக்கப்பட உள்ளது.
குடியுரிமைக் கட்டணம் 300 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் முதல், அது 150 சுவிஸ் ஃப்ராங்குகளாக குறைக்கப்பட உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
19 வயதுக்கு குறைந்தவர்களுக்கு எப்போதும்போல, குடியுரிமைக் கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.