Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் வாழும் அதிக வயதுடைய பெண்கள்! - ஒரு குறுந்தொடர்!! (03)

பிரான்சில் வாழும் அதிக வயதுடைய பெண்கள்! - ஒரு குறுந்தொடர்!! (03)

20 வைகாசி 2021 வியாழன் 10:30 | பார்வைகள் : 19667


இந்த தொடர் இன்றும் தொடர்கிறது. 
 
Valentine Ligny என்பது அவரது பெயர். பா-து-கலேயின் Avion பகுதியில் பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஒக்டோபர் 22 ஆம் திகதி 1906 ஆம் ஆண்டு Avion நகரில் பிறந்த இவருக்கு 114 வயது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இவர் Pierre Ligny என்பவரை திருமணம் செய்துகொண்டார். பக்கத்து வீட்டினைச் சேர்ந்த குழந்தை ஒன்று நீரில் மூழ்குவதை பார்த்த Pierre , குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்து தனது உயிரை மாய்ந்துக்கொண்டார். 
 
கணவர் இறந்தாலும் வாழ்க்கை மீதான பிடிப்பு Valentine Ligny இற்கு குறையவில்லை. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வந்தார்.  பின்னர் இரண்டாம் உலகமகா யுத்தம் காரணமாக அவர் Amiens நகருக்கு இடம்பெயர்ந்தார். 
 
தற்போது இவர் Amiens நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வசித்த முதியோர் இல்லத்தில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடியது. கொரோனாவின் பிடியில் அவர் சிக்காமல் தன்னை காப்பாற்றிக்கொண்டார். 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி ஜப்பானைச் சேர்ந்த Mina Kitagawa எனும் மூதாட்டி இறக்க... இவர் உலகின் முதல் 10 வயதான பெண்மணி எனும் பட்டியலுக்குள் வந்தார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்