Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் வாழும் அதிக வயதுடைய பெண்கள்! - ஒரு குறுந்தொடர்!! (02)

பிரான்சில் வாழும் அதிக வயதுடைய பெண்கள்! - ஒரு குறுந்தொடர்!! (02)

17 வைகாசி 2021 திங்கள் 13:30 | பார்வைகள் : 20270


இந்த பட்டியலில் மூன்றாவதாக இடம்பிடிக்கும் பெண்மணி Jeanne Bot  என்பவராவார். இவரும் தற்போது உயிருடன் தான் உள்ளார். 1905 ஆம் வருடம் ஜனவரி 14 ஆம் திகதி பிறந்த இவருக்கு தற்போது 116 வயதுகளும் 123 நாட்களும் ஆகின்றன. 
 
உலகில் மிக வயதான பெண்மணிகள் பட்டியலில் 16 ஆவது இடத்தில் உள்ளார் இவர். 
 
பின்னர் இந்த பட்டியலை பார்வையிட்டால் அதிகமானோர் அமெரிக்காவிலும் கனடாவிலும் வசிக்கின்றனர். ஆசியாவில் இருந்து (அல்லது கிழக்கு ஆசியா) இந்த பட்டியலில் உள்ள ஒரே நாடு ஜப்பான் மாத்திரமே. இந்த நாட்டிலும் ”100 அடிச்சும் அவுட்டு ஆகல டெண்டுல்கர் தான் நம்மாளு!” என பலர் வசிக்கின்றனர். 
 
சரி.. இந்த பட்டியலில் உள்ள அடுத்த பிரெஞ்சு பெண் யார்?
 
Marie Brémont எனும் ஒரு பெண். தற்போது உயிருடன் இல்லை. இவர் 115 வருடங்களும் 42 நாட்களும் உயிர் வாழந்தார். மூன்று நூற்றாண்டுகளில் இவர் வாழ்ந்துள்ளார். அதாவது 1800, 1900 மற்றும் 2000 ஆகிய நூற்றாண்டுகளை இவர் சந்தித்துள்ளார். ஏப்ரல் 25, 1886 ஆம் வருடம் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஜுன் 6 ஆம் திகதி சாவடைந்திருந்தார். 
 
இவர் தனது வாழ்நாளில் மூன்று திருமணங்கள் முடித்துள்ளார். முதலாமவர் ஒரு தொடருந்து நிறுவனத்தில் பணி புரிந்து, யுத்தம் ஒன்றில் சாவடைந்தார். பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து, அவரும் பாதி மண வாழ்க்கையிலேயே சாவடைந்திருந்தார். 
 
பின்னர் இறுதியா ஒரு திருமணம் செய்துகொண்டார். தனது மூன்றாவது கணவர் இறப்பதற்குள் தாம் இறந்துவிடவேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் துரதிஷ்ட்டம் சாவும் எங்கள் இஷ்ட்டப்படி வருவதில்லையே... கணவருடன் பயணித்துக்கொண்டிருந்த போது மகிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவர் இறந்து விட.. இவர் சில எலும்பு முறிவுகளோடு தப்பித்துக்கொண்டார். அப்போது இவருக்கு வயது 103. 
 
பின்னர் மருத்துவமனையிலும், ஓய்வகத்திலும் வாழ்க்கையை கழித்த இவர்.. தனது 115 ஆவது வயதில் இயற்கை மரணம் எய்தினார். 
 
”நம்ம 100 வயசுவரைக்கும் வாழனும்டா!” என பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அதெல்லாம் இளமை இருக்கும் வரை தான்.. ஆனால் 90 வயதில் இருக்கும் ஒருவரிடம் சென்று கேளுங்கள்... அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடங்கள்.. நரக வாழ்க்கை என்பார்கள். 
 
இந்த உலகில் எவருக்கும் குழந்தை பருவமும்... இளமையும் நீடித்ததில்லை. ஆனால் முதுமை நீடித்துள்ளது. யோசித்து பார்த்தால் அது ஒரு விதமான தண்டனையே!
 
இந்த பட்டியல் நாளையும் நீளும்..!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்