20 லட்சம் புலம்பெயர்ந்தோரை உடனடியாக வெளியேற்றும் ஈரான்
11 புரட்டாசி 2024 புதன் 08:54 | பார்வைகள் : 2568
ஈரான் நாடானது சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த 20 லட்சம் பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் உள்ள அதிகாரிகள் மார்ச் 2025 இறுதிக்குள், நாட்டில் சட்டப்பூர்வ வதிவிட அந்தஸ்து இல்லாத ல் 20 லட்சம் மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படைகளின் தளபதி அஹ்மத்-ரெசா ராடன் செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார்.
2021-ஆம் ஆண்டில், தங்கள் அண்டை நாடான ஆப்கானிஸ்தாநாய் தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கிருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் நுழைந்தது குறித்த விவாதம் ஈரானில் பல மாதங்களாக நடந்து வருகிறது.
முன்னதாக, ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி, ஆப்கானியர்களின் அவல நிலை குறித்து கவலை தெறிவித்தார்.
ஈரான் "பல புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.
"இந்த விடயத்தை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கிளர்ச்சியற்ற வழியில் கையாள்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.
இதில் முன்னுரிமை சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று மொமெனி கூறினார்.