Paristamil Navigation Paristamil advert login

"ஜெயம் ரவி விவாகரத்து முடிவு எடுக்க காரணம் என்ன?

11 புரட்டாசி 2024 புதன் 08:58 | பார்வைகள் : 3887


நடிகர் ஜெயம் ரவி, அண்மையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். மேலும், விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தன்னை விவாகரத்து செய்ய ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பதாக அவரின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், தனது திருமண வாழ்க்கை குறித்து அண்மையில் வெளியான அறிக்கை கவலையும் மன வேதனையும் தருவதாக தெரிவித்துள்ளார்.

தனது கவனத்திற்கு வராமலும், தனது ஒப்புதல் இன்றியும் வெளியான அறிவிப்பு என்றும் விளக்கி உள்ளார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக தான் வாழ்ந்த வாழ்க்கை, அதற்குரிய கௌரவம், கண்ணியம், தனித்தன்மையை அந்த அறிக்கையின் மூலம் இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் ஜெயம் ரவியிடம் மனம் விட்டு பேசவும் சந்திக்கவும் முயற்சி போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தானும் தனது 2 குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு, சொந்த விருப்பத்தைச் சார்ந்து ரவியாக எடுத்தது என்றும் குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தன் மீதும் தனது நடத்தையின் மீதும் களங்கம் கற்பிக்கும் வகையில் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களால் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்

வர்த்தக‌ விளம்பரங்கள்