ஜப்பானில் அணுமின் நிலைய கழிவுகளை அகற்ற நவீன ரோபோ

11 புரட்டாசி 2024 புதன் 09:14 | பார்வைகள் : 3894
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்துள்ளது.
அதனால்அங்குள்ள கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த கழிவுகள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்த ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அங்குள்ள அணுஉலை கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
3 டன் அளவில் கழிவுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. கதிரியக்க அளவினை அறிந்த பின்னர் முழு வீச்சில் இந்த பணி தொடரும் எனவும், இதனை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.