Paristamil Navigation Paristamil advert login

முட்டை ஆப்பம்

முட்டை ஆப்பம்

11 புரட்டாசி 2024 புதன் 09:03 | பார்வைகள் : 2761


முட்டை, ஆப்பம் ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி எப்போது சுவையான, சத்தான கேரளா ஸ்டைலில் முட்டை,ஆப்பம் ரெசிபி செய்வது குறித்து விரிவாக பார்ப்போம்

கேரளா ஸ்டைல் முட்டை  ஆப்பம் ரெசிபி:

தேவையான பொருட்கள்:

9 முட்டை,

2 கப் கோதுமை மாவு,

2 கப் அனைத்து வகையான மாவு,

2 கப் தேங்காய் துருவல்,

15 முந்திரி,

8 ஏலக்காய்,

¼ டேபிள் ஸ்பூன் சோடா மாவு,

எண்ணெய்,

சர்க்கரை,

உப்பு.

செய்முறை:

அனைத்து வகையான மாவு, கோதுமை மாவு, உப்பு மற்றும் சோடா மாவு ஆகியவற்றை ஒன்றை சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டு பின் சலிக்கவும்.

அதன் பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கவும். பின்னர் அதில் சர்க்கரை, ஏலக்காய், தேங்காய் துருவல், முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

மாவுக் கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தவாவை சூடாக்கவும். அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பி விடவும்.

அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வேகும் வரை மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது சூடான கேரளா ஸ்டைல் ​​எக் ஆப்பம் ரெசிபி தயார். இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்