பிரான்சில் வாழும் அதிக வயதுடைய பெண்கள்! - ஒரு குறுந்தொடர்!! (01)
16 வைகாசி 2021 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 20101
மக்களே.. எல்லாரும் நலமா..? சில நாட்கள் முன்பாக ‘நோர்து டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!’ என ஒரு சிறிய தொடர் பார்த்திருந்தோம்.. அதை அடுத்து.. இன்று மற்றுமொரு சிறிய தொடர் ஒன்றை ஆரம்பிக்கின்றோம்.
“பிரான்சில் வசிக்கும் மிக வயதான பெண்மணிகள்!” குறித்து இந்த ‘மினி சீரீஸ்’ இல் காணலாம்.
இந்த பட்டியல் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இதுவரை உலகில் வசித்த பெண்களில் அதிக வயது வயது வரை வாழ்ந்த பெண்மணி யார் தெரியுமா? Jeanne Calment என்பவர் தான். இவரிடம் தான் அந்த ‘ரெக்கோர்ட்” உள்ளது. இவர் மொத்தமாக 122 வருடங்களும் 164 நாட்களும் உயிர் வாழ்ந்துள்ளார். 90 வயது வரையிலும் வாழ்க்கை மீது பிடிப்புடன் வாழ்ந்த இவர்.. பின்நாட்களில் தனது முதுமையே தனக்கு எதிரியாக எண்ணினார்.
“என்னத்த வாழ்ந்து.. என்னத்த கண்டோம்!” எனும் கணக்கில் அவர் தனது சாவை எதிர்நோக்கி காத்திருக்கலானார்.
1875 ஆம் வருடன் பெப்ரவரி 21 ஆம் திகதி பிறந்த இவர்... 1997 ஆம் வருடம் ஓகஸ்ட் 4 ஆம் திகதி சாவடைந்தார். மனித குல வரலாற்றிலேயே அதிக நாட்கள் உயிருடன் இருந்த மனிதர் எனவும்.. இரண்டு உலகப்போர்களை சந்தித்த நபர்ர் எனவும் இவருக்கு இரு சிறப்புகள் உண்டு.
உலகில் அதிக வயது வாழ்ந்த ப்பெண்மணி பட்டியலில் முதல்லாவது இடத்தில் இவர் இருக்க... அடுத்த ப்பிரெஞ்சு பெண்மணி எட்டாவது இடத்தில் இருக்கின்றார்.
அவரது பெயர் Lucile Randon. 1904 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த இவருக்கு தற்போது 117 வயதும் 94 நாட்களும். இன்னமும் அவர் உயிருடன் தான் உள்ளார்.
இவருக்கு Sister André என இன்னுமொரு பெயரும் உள்ளது. அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இவர் , அதில் இருந்து மீண்டு தற்போது உடல்நலத்துடன் உள்ளார்.
இன்றைய திகதியில் பிரான்சில் உயிருடன் இருக்கும் அதிக வயது கொண்ட பெண்மணி இவராவார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட உலகின் மிக வயதான நபரும் இவராவார்ர்.
சூப்பரான தகவல்கள் இல்லையா..? இந்த ஆச்சரிய பட்டியல் நாளையும் தொடரும்..!