Périphérique à 50 km/h : திட்டத்தைக் கைவிடுமாறு கோரும் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர்!
11 புரட்டாசி 2024 புதன் 14:32 | பார்வைகள் : 4333
சுற்றுவட்ட வீதியின் வேகத்தை மணிக்கு 50 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை ஆன் இதால்கோ அறிவித்துள்ளார். ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
“Périphérique à 50 km/h” எனும் இந்த திட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. சுற்றுவட்ட வீதியில் 500,000 பேர் வசிப்பதாகவும், அவர்கள் நீண்டகால நோய்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாகவும், ஒலி மாசடைவுக்கு உள்ளாகிறதாகவும் தெரிவிக்கப்பட்டு அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தைக் கைவிடும் படி பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse கோரிக்கை வைத்துள்ளார்.
வீதிகளில் ஒலியைக் கட்டுப்படுத்தும், அல்லது குறைக்கும் பூச்சுக்கள் (d’enrobés phoniques) பயன்படுத்துவதால் வீதிகளில் எழும் சத்தத்தைக் குறைக்க முடியும் எனவும், அது இதற்கு சரியான மாற்றீடாக இருக்கும் எனவும் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.