Château de Vincennes : சில கேள்வி பதில்கள்!!
15 வைகாசி 2021 சனி 12:30 | பார்வைகள் : 22093
கே : Château de Vincennes என்பது என்ன..?
இது ஒரு அரச கோட்டை. 14 ஆம் நூற்றாண்டு பழமையான கோட்டை. கிட்டத்த பிரான்சில் உள்ள பழமையான கோட்டைகளில் இதுவும் ஒன்று. Château என்றால் கோட்டை என்று அர்த்தம். Vincennes நகரில் உள்ளதால் இதற்கு Château de Vincennes என பெயர்.
கே : இந்த கோட்டை யாரால் கட்டப்பட்டது?
ஆறாம் பிலிப் மன்னனால் கட்டப்பட்டது. இவர் 1293 ஆம் ஆண்டில் பிறந்து 1350 ஆம் ஆண்டு இறந்தார். இடையில் 1336 ஆம் ஆண்டு இந்த கோட்டையை கட்ட ஆர்ம்பித்தார்.
கே : இந்த கோட்டை பரிசில் இருந்து எவ்வளவு தூரம்? எப்படி செல்வது?
பரிசில் இருந்து 6.7 கிலோ மீற்றர் தூரம் கொண்டது இந்த கோட்டை. முதலாம் இலக்க மெற்றோவில் ஏறி Chateau de Vincennes நிலையத்தில் இறங்கினால் எதிரே கோட்டை!
கே : இங்கு பார்வையிட என்னெல்லாம் உள்ளது..?
இது ஒரு அரச கோட்டை என்பதால் பல அரச சின்னங்கள், ஆவணங்கள், போர்க்கால ஆயுதங்கள் என்பவற்றை பார்வையிடலாம். அத்தோடு இங்குள்ள தோட்டங்களையும், கட்டிட கலை வடிவத்தையும் காணலாம். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கட்டிடத்தில் இத்தனை நுட்பமான வேலைப்பாடுகளா என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
கே : சமூக வலைத்தங்களில் பின் தொடர முடியுமா..?
ஏன் இல்லை..? இந்த Chateau of Vincennes கோட்டைக்கு உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் உள்ளன.
அழகிய புகைப்படங்களை இஸ்டகிராமில் காண @chateaudevincennes என தேடவும். அதேபோல் தரவுகளையும் தகவல்களையும் காண பேஸ்புக்கில் @ChateauDeVincennes எனவும், டுவிட்டரில் பின் தொடரட @leCMN எனவும் தேடவும்.